மக்­க­ளுக்கு அழுத்தம் கொடுக்கும் அர­சியல் பிர­சா­ரங்­களை எவரும் முன்­னெ­டுக்க வேண்டாம். அதி­கா­ரத்தில் உள்­ள­வர்­களும் தேர்தல் சட்­டத்தை மீறாது செயற்படவேண்டும் என தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார். 

தபால்­மூல வாக்­க­ளிப்பு எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்­பிக்­கின்­றது. வாக்­காளர்கள் தமது உரி­மை­களை தவ­ற­வி­டக்­கூ­டாது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

தேர்­தல்கள் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின்போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்; 

தபால் மூல வாக்­க­ளிப்பு  எதிர்­வரும் 22 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை இடம்­பெறும். ஏனைய அரச காரி­யா­ ல­யங்கள், இரா­ணுவ முகாம்கள், தேசிய பாட­சா­லை­களில் அரச அதி­கா­ரி­களின் தபால் மூல வாக்­க­ளிப்பு 25 மற்றும் 26 ஆம் திக­தி­களில் இடம்­பெறும் அதேபோல் குறித்த நாட்­களில் தபால் மூல வாக்­க­ளிப்பை செய்ய முடி­யாத நபர்­க­ளுக்கு  பெப்­ர­வரி  1 ஆம் மற்றும் 2ஆம் திக­திகள் வாக்­க­ளிக்கும் வாய்ப்­புகள் வழங்­கப்­படும். இவை மாவட்ட செய­ல­கத்தில்  மாத்­தி­ரமே நடை­பெறும். வாக்­கெண்ணும் பணி­களை கண்­கா­ணிக்க அர­சியல் கட்­சிகள், சுயேச்­சைக்­கு­ழுக்கள் மற்றும் கண்­கா­ணிப்பு அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் கலந்­து­கொள்ள முடியும். ஒரு கட்­சியின் அல்­லது குழுவின் சார்பில் ஒரு நபரே கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களில் கலந்­து­கொள்ள முடியும். அதேபோல் வாக்­கெண்ணும் காரி­யா­ல­யத்தின் யாரும் கட்­சிகள், சுயேச்­சைக்­குழு சார்பில் கட­மை­யாற்ற முடி­யாது. 

மேலும் உத்­தி­யோ­க­பூர்வ வாக்­களர் அட்­டை­களை உரிய இடங்­க­ளுக்கு வழங்கும் நட­வ­டிக்­கை­களை இன்று (நேற்று ) வழங்க ஆரம்­பித்­துள்ளோம். நாளையும்( இன்று ) சில காரி­யா­ளை­யங்­க­ளுக்கு வழங்­கப்­படும்.  அர­சியல் கட்­சிகள் அதி­கா­ரத்தில் இருக்கும் கட்­சிகள் தமது அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்தி தேர்தல் சட்­டங்­களை மீற  வேண்டாம் என்­பதை  நாம் ஆரம்­பத்தில் இருந்தே தெரி­வித்து வரு­கின்றோம். அதேபோல் அரச சொத்­துக்­களை பயன்­ப­டுத்­தவோ அல்­லது துஷ்­பி­ர­யோகம் செய்­யவோ வேண்டாம். அதேபோல் மக்­களும் பொருட்­களை வாங்கும் நோக்­கத்தில் சொற்ப தேவை­க­ளுக்­காக வாக்­க­ளிக்­கவும் வேண்டாம். மக்­களும் தேர்தல் சட்­டத்தை சரி­யாக கையாள வேண்டும், தேர்தல் இடம்­பெற 48 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்னர் தேர்தல் பிரச்­சார செயற்­பா­டு­களை நிறுத்­திக்­கொள்ள வேண்டும். அத்­துடன் மத தளங்­களில் மத நிகழ்­வு­களில் தேர்தல் பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுக்க வேண்டாம்.  

தேர்தல் ஊழல் இடம்­பெற்று வரு­கின்­றது என்­பதை நாம் மறுக்­க­வில்லை கடந்த காலங்­களில் இருந்து தேர்தல் ஊழல் இடம்­பெற்று வரு­கின்­றது. ஆனால் இப்­போது ஏற்­பட்­டுள்ள நல்ல மாற்­றங்கள் எதிர்­கால நகர்­வு­களில் நல்ல மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தும். இப்­போது ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மாற்­றங்­களில் எமது வருங்­கால சந்­ததி சரி­யான தேர்தல் முறை­மையின் கீழ் வழி­ந­டத்­தப்­படும் வாய்ப்­புகள் அதி­க­மாக உள்­ளன. அந்த பொறுப்பு எம் அனை­வ­ரி­டமும் உள்­ளது. மேலும் மக்­க­ளுக்கு அழுத்தம் கொடுத்து வாக்­கு­களை எவரும் பெற்­றுக்­கொள்ள வேண்டாம். மக்­களை சிந்­தித்து செயற்­ப­டுத்தும் கால எல்­லை­யினை வழங்க வேண்டும். அதற்கு அர­சியல் கட்­சிகள் அதி­கா­ரத்தில் உள்ள நபர்கள் இடமளிக்க வேண்டும். அதுவே ஜனநாயக தேர்தல் சுதந்திரம் என கருதுகின்றோம். இவ்வாறான கலாசாரத்தில் இருந்து மீள வேண்டும் என்றால் அனைவரும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். இது மனித உரிமைகளில் ஒன்றாகும். அதை தடுப்பதும் மனித உரிமை மீறலாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.