"தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடருக்கு தயாராகாமல் வலுவிழந்த இலங்கை கிரிக்கெட் அணியுடன் விளையாடியது கால விரயம்" என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பெடி குற்றம்சாட்டியுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரொன்றை முழுமையாக இழந்துள்ள இந்திய அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே பெடி இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடருக்காக இந்திய அணி எந்தவொரு நிலையிலும் தங்களை தயார் படுத்தவில்லை. இலங்கையுடன் விளையாடியது கால விரயம்.

தென்னாபிரிக்காவிற்கு தயாராகும் நிலையில் ஒன்றரை மாதமாக வலுவிழந்த அணியுடன் மோதியதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒரு கடினமான தொடருக்கு செல்வதற்கு முன் தயார் படுத்ததுவது அவசியமானதாகும்” என கூறினார்.