மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி அமைச்சின் செயலாளருடன்  இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின் பல கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை பணியாளர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளனர்.

உரிய தீர்வு கிடைக்காவிடினும் குறித்த அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்  இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.