வட அயர்லாந்தில் கடும் பனி மூட்டமான காலநிலை தொடர்ந்து வருகின்ற நிலையில், குறித்த பகுதிக்கு வானிலை ஆய்வு மையத்தினால் நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிலவேளைகளில் வானிலையில் மாற்றம் நிகழலாம் அல்லது வானிலை மோசமடையக்கூடும் எனவே எச்சரிக்கை குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு மக்களை அறிவுறுத்தும் வகையிலேயே இந்த மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனி மூட்டமான காலநிலையின் காரணமாக வட அயர்லாந்தில் சுமார் 280இற்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.