ஹொங்­கொங்கில் மொங் கொக் மாவட்­டத்தில் சீன புது­வ­ருட தினத்­துக்­காக ஸ்தாபிக்­கப்­பட்ட நடை பாதைக் கடை­களை பொலிஸார் அகற்ற செவ்­வாய்க்­கி­ழமை மேற் ­கொண்ட நட­வ­டிக்­கையின்போது இடம்­பெற்ற மோதலில் பொலிஸார், ஊட­க­வி­ய­லா­ளர்கள் உட்­பட குறைந்­தது 90 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.

போர்ட்லாண்ட் வீதி மற்றும் ஷாங் துங் வீதி என்­ப­வற்றில் அமைக்­கப்­பட்­டி­ருந்த நடை­பாதைக் கடை­க­ளி­லி­ருந்து வியா­பா­ரி­களை அகற்ற உணவு மற்றும் போஷாக்குப் பரி­சோ­த­கர்கள் இர­வோ­டி­ர­வாக மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யை­ய­டுத்து மோதல் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. சின­ம­டைந்த வியா­பா­ரிகள் கற்­க­ளையும் போத்­தல்­க­ளையும் வீசி பொலி­­ஸாரைத் தாக்­கி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட வியா­பா­ரி­களைக் கலைக்க பொலிஸார் குண்­டாந்­த­டி­யடிப் பிர­யோகம் மற்றும் மிளகு தூள் பிர­யோகம் என்­ப­வற்றை மேற்­கொண்­டுள்­ளனர். அத்­துடன் குறைந்­தது 23 பேர் கைதுசெய்­யப்­பட்­டுள்­ளனர்.

இந்த சம்­பவம் குறித்து கண்­டனம் தெரி­வித்­துள்ள பிராந்­திய தலைவர் சி.வை. லெயுங், இந்தக் கல­வரம் தொடர்பில் சகிப்புத் தன்­மைக்கு இட­மில்லை என்று கூறினார். எனினும் நிலைமை சில மணித் தியாலங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய் திகள் தெரிவிக்கின்றன.