உலகின் மிகவும் குளுமை வாய்ந்த பிரதேசங்களை உள்ளடக்கிய நாடு ரஷ்யா. இங்கு வெப்பநிலை சர்வசாதாரணமாகவே மைனஸ் என்ற நிலையிலே இருக்கும். 

குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக -40 டிகிரி என்ற அளவுக்கு கீழ்  பதிவாகும். இந்நிலையில் உலகிலேயே இதுவரை பதிவாகாத குறைந்தபட்ச வெப்பநிலை தற்போது ரஷ்யாவில் பதிவாகியுள்ளது.

ரஷ்யாவின் Sakha Republic மாகாணத்தில் Oymyakonsky மாவட்டத்தில் உள்ள Oymyakon எனும் தொலைதூர பிரதேச கிராமம் ஒன்றில் -62 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

உறையவைக்கும் கடுமையான குளிர் காரணமாக அங்கு வெப்பநிலையை பதிவு செய்ய வைக்கப்பட்டிருந்த தெர்மாமீட்டர் கருவி வெடித்து சிதறியுள்ளது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடுமையான குளிர் காரணமாக அங்கு பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் காரில் பயணித்த இருவர் தங்களது வாகனம் பழுதடைந்ததைத் தொடர்ந்து சாலையில் இறங்கி நடந்து சென்ற போது  குளிரில் உறைந்து உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக உலகிலேயே மிகவும் குளிர்ந்த வெப்பநிலை 1993ஆம் ஆண்டு பதிவாகியது, தற்போது அந்த சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது.