கொழும்பின் சில பகுதிகளில் நடைபெற்று வரும் நிலத்தடி நீர் குழாய் திருத்த பணிகள் காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், கொட்டாஞ்சேனை முதல் இப்பாவத்தை வரையிலான இராமநாதன் வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Image result for வீதிகள்  மூடப்படும் virakesari

இதற்கமைய குறித்த வீதி நாளை இரவு 9 மணி முதல் எதிர்வரும் திங்கட் கிழமை 22 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு கோட்டையிலிருந்து செல்லும் வாகனங்கள் ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து ஜோர்ஜ் ஆர்.டி சில்வா மாவத்தை வழியாக புளுமெண்டல் வழியாக மாதம்பிட்டி சென்று ஜேம்ஸ் வீதியை சென்றடைய முடியும் என்பதோடு, முகத்துவாரத்திலிருந்து கோட்டை நோக்கி செல்லும் வாகனங்களும் மேற்குறிப்பிட்ட வீதியினை இருவழி போக்குவரத்தாக பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.