இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் தனது கணவர் தன்னை ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்ய முயற்சித்ததாக பொலிஸ நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த 25 வயது இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த நபரை காதலித்து திருமணம் செய்து கணவருடன் சவுதிஅரேபியாவில் குடியேறினார்

திருமணம் ஆன ஒரே மாதத்தில் தந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று நாடு திரும்பிய அந்த பெண், 'தனது கணவர் தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாற கட்டாயப்படுத்துவதாகவும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு தன்னை விற்க முயற்சித்ததாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.

சவுதி அரேபியாவில் உள்ள  கணவர் இந்த முறைப்பாட்டை மறுத்துள்ளார். தனது மனைவி தன் மீது மிகுந்த அன்பு கொண்டவராக இருந்தார் என்றும் அவர் தனது சுயநினைவுடன் இந்த புகாரை கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்றும் தனது மனைவி மீண்டும் திரும்பி வந்து தன்னுடன் வாழ்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் சவுதி ஊடகங்களுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து கேரளா பொலிஸார் தீவிர விசாரணைகளை நடாத்தி வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.