சபா­நா­ய­க­ருக்கு நான் ஒரு யோசனை சொல்­கின் றேன். எமது நாட்டின் பாரா­ளு­மன்­றத்தில் உள்ள 225 உறுப்­பி­னர்­க­ளையும் பாட­சா­லை­க­ளுக்கு அனுப்­புங்கள். மீண்டும் பாட­சா­லைக்கு சென்­றா­வது அவர்கள் ஒழுக்­கத்தை கற்றுக் கொள்ள முயற்­சிக்­கட்டும் என அமைச்சர் மனோ­க­ணேஷன் தெரி­வித்­துள்ளார். 

கொழும்பு - டட்லி சேனா­நா­யக்க வித்­தி­யா­ல­யத்தில் நேற்று இடம்­பெற்ற சகோ­த­ரத்­துவ தைப்­பொங்கல் விழாவில்   பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

எமது நாட்டின் பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வாரம் அமைச்­சர்­க­ளுக்­கி­டை­யிலும் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டை­யிலும் மல்­யுத்தம் இடம்­பெற்­றது. இவர்கள் பாட­சாலை மாண­வர்­களைப் போல் பாரா­ளு­மன்­றத்தில் சண்­டை­யிட்டுக் கொள்­கின்­றனர். அது மாத்­தி­ர­மல்ல. நேற்று முன்­தினம் அமைச்­ச­ர­வையில் ஜனா­தி­பதி மனம்  வருந்தும் படி­யான சம்­ப­வங்கள் நடை­பெற்­றுள்­ளன. இவ்­வா­றான சம்­ப­வங்­களை நினைத்து நான் வெட்­கப்­ப­டு­கின்றேன். 

சக வாழ்வு என்­பது இனம், மதம் மற்றும் மொழி ஆகி­ய­வற்­றுக்குள் மாத்­திரம் கட்­டுப்­பட்­ட­தாக இருக்கக் கூடாது. இனம், மதம் , மொழி என்­ப­வற்றைக் கடந்து அர­சி­ய­லிலும் சக வாழ்வு என்­பது அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும். நாட்டின் பிர­ஜைகள் மாத்­தி­ர­மன்றி ஜனா­தி­பதி முதற்­கொண்டு பிர­தமர் வரை அனை­வரும் சக­வாழ்வை பின்­பற்ற வேண்டும். 

சாதா­ரண மக்­க­ளி­டத்தில் இப்­பி­ரச்­சினை இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. காரணம் தற்­போது சகோ­தர மொழிப்­பா­ட­சாலை ஒன்றில் தைப்­பொங்கல் தினத்தை மாண­வர்கள் ஒற்­று­மை­யுடன் கொண்­டா­டு­கின்­றனர். இவர்­களைப் பார்த்து அமைச்­சர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் நான் ஆசி­ரி­யர்­க­ளுக்கும் பெற்­றோர்­க­ளுக்கும் ஒரு வேண்டு கோள் விடு­கின்றேன். தயவு செய்து பாட­சாலை மாண­வர்­களை பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­பா­தீர்கள். மாண­வர்­களின் ஒழுக்­கத்­திற்கு அது பாது­காப்­பல்ல. 

இலங்கையின் கடந்த கால அரசியல் தலைவர்களின் கருத்தின் படி எமது நாட்டை வெகு விரைவில் இனம், மதம், மொழி என்பவற்றைக் கடந்து அனைத்து பிரஜைகளையும் உள்ளடக்கிய இலங்கையர் என்ற இனத்தின் கீழ் ஒன்றிணைக்க வேண்டும்.