ஐ.எஸ்.தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான கனேடிய வான் தாக்­கு­தல்­க­ளுக்கு 22 ஆம் திக­தி­யுடன் முற்­றுப்­புள்ளி

Published By: Raam

10 Feb, 2016 | 08:40 AM
image

கன­டா­வா­னது சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களை இலக்­கு­வைத்து மேற் கொள் ­ளப்­படும் தாக்­கு­தல்களை எதிர்­வரும் 22 ஆம் திகதி முதல் முடி­வுக்கு கொண்டுவர­வுள்­ள­தாக அந்­நாட்டுப் பிர­த மர் ஜஸ்டின் ரூடோ தெரி­வித்தார்.

மேற்­படி வான் தாக்­கு­தல்­களால் மட்டும் உள்­நாட்டு மக்­க­ளுக்கு பாது­காப்பை பெற்றுத் தர முடி­யாது என அவர் திங்­கட்­கி­ழமை ஒட்­டாவா பிராந்­தி­யத்தில் ஆற்­றிய உரையின் போது கூறினார்.

கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் பிர­த­ம­ராக தெரிவுசெய்­யப்­பட்ட ஜஸ்டின், அந்தப் பிராந்­தி­யத்தில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள 6 போர் விமா­னங்­களை வாபஸ் பெறு­வ­தற்கு உறு­தி­ய­ளித்­துள்ளார்.

எனினும் கன­டாவின் இரு கண்­கா­ணிப்பு விமா­னங்கள் தொடர்ந்து அங்கு கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் விமா­னங்­க­ளுக்­கான மீள் எரி­பொ­ருளை வழங்கும் விமானம் அந்தப் பிராந்­தி­யத்தில் செயற்­ப­ட­வுள்­ள­துடன் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக போராடும் பிராந்­திய படை­க­ளுக்கு பயிற்சி வழங்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­தப்­படும் கனே­டிய படை­வீரர்­களின் தொகையும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

"அந்தப் பிராந்­தி­யத்­தி­லான வான் தாக்­குதல் நட­வ­டிக்­கைகள் குறு­கிய கால இரா­ணுவ மற்றும் பிராந்­திய ஆதா­யங்­க­ளுக்கு மிகவும் பய­னுள்­ள­வை­யா­க­வுள்­ளதை புரிந்து கொள்­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது. ஆனால் உள்­நாட்டு சமூ­கங்­களின் நீண்ட கால ஸ்திரத்­தன்­மையை அவர்கள் சொந்­த­மாக அடை­வ­தற்கு அது வழி­வகை செய்­யாது" என ஜஸ்டின் கூறினார்.

"ஆப்­கா­னிஸ்­தா­னி­லான ஒரு தசாப்த சிர­ம­மான போர் நட­வ­டிக்­கை­யி­லி­ருந்து கனே­டி­யர்கள் இந்தப் பாடத்தை முதன்முதலாக கற்றுக்கொண்­டனர். அங்கு எமது படை­யினர் நிபு­ணத்­துவம் பெற்ற இரா­ணுவ பயிற்­சி­யா­ளர்­க­ளாக உலகப் பிர­பலம் பெற்­றனர்" என்று கூறிய ஜஸ்டின், அதனால் கனே­டிய ஆயுதப் படை­யினர் ஈராக்­கிய படை­யி­ன­ருக்கு பயிற்­சி­ய­ளிப்­ப­தற்கு மேலும் இரா­ணுவ வளங்­களை ஒதுக்­கீடு செய்­ய­வுள்­ள­தாக கூறினார்.

இந்­நி­லையில் கனே­டிய பிர­த­மரின் அறி­விப்­புக்கு அந்­நாட்டு எதிர்க்­கட்சி கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.

கன­டாவின் நேச நாடுகள் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில், கனே­டிய அர­சாங்கம் அந்தப் போரி­லி­ருந்து பின்­வாங்கிச் செல்­வ­தாக எதிர்க்கட்சித் தலைவரான ரொனா அம்புரோஸ் தெரி வித்தார்.

"நாம் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் கனடாவின் புதிய அணுகுமுறை தொடர்பில் குறிப்பிட்டால், அது பின் னோக்கிச் செல்கிறது என்றே கூறவேண்டி யுள்ளது” என அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் குற்றஞ்சாட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17