மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில்  2008 ஆம் ஆண்டிலிருந்து  2014 ஆம் ஆண்டுவரை   மத்திய வங்கியில்  இடம்பெற்றதாகக் கூறப்படும்  4000 பில்லியன் ரூபா  மோசடி குறித்து  உரிய விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச் சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.  

Image result for ராஜித சேனாரட்ன virakesari

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற   வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர்   மேற்கண்டவாறு  கூறினார்.   

அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரட்ன    மேலும் குறிப்பிடுகையில் 

கேள்வி: மத்தியவங்கி விசாரணை அறிக்கை  எப்படி பாராளுமன்றத்திற்கு   சமர்ப்பிக்கப்டுவதற்கு முன்னர்  முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு   சமர்ப்பிக்கலாம்.?

பதில்: அவர் தகவலறியும் சட்டமூலத்தைப் பயன்படுத்தி அதைப் பெற்றிருக்கலாம். தற்போது பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின்  அறிக்கையின் பிரதிகளை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும்      மத்திய வங்கிக்கும் அனுப்பியிருந்தார்.    ஆனால் பிரதமர் முதலில் அமைச்சரவைக்கு அனுப்புமாறு  கேட்டிருந்தார்.  

அதன் பின்னர்   பாராளுமன்றத்திற்கும் வழங்கவேண்டுமென  கூறியிருந்தார்.  ஆனால் தற்போது முன்னாள் நிதி அமைச்சர் அறிக்கையில்  தனது பெயர் இல்லையெனக் கூறுகிறார்.  அவரது பெயர் அறிக்கையில் இல்லாவிடின்  ஜனாதிபதி  வெறுமனே கூறுவாரா?   ஜனாதிபதி அதிலுள்ள விடயங்களையே கூறினார். 

கேள்வி: எவ்வளவு காலத்தில்  சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்யும்?

பதில்: (தயாசிறி) சட்டமா அதிபர் திணைக்களம்  இந்த அறிக்கையை  ஆராய்ந்து வருகிறது. எனவே விரைவில்  தேவையான நடவடிக்கைகள் எடுத்து  வழக்கு   தாக்கல் செய்யும்  .

கேள்வி: ஆறுமாதங்கள் ஆகுமா? 

பதில்: இல்லை இல்லை  ஒருமாதத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். 

பதில் (ராஜித) 2008, 2014 காலத்தில் இடம்பெற்ற  4000 பில்லியன்  ரூபா மோசடி தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும்.  நீங்கள் இதில் அவசரப்படாதீர்கள். நாங்கள் தேவையான நடவடிக்கை எடுப்போம்.  ஊடகங்கள்  இந்த 4000  பில்லியனை விட்டுவிட்டு  11 பில்லியன் குறித்தே பேசிக்கொண்டிருக்கின்றனர்.