அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முக்கியமான  ஒரு உபதேசத்தை வழங்கினேன். அவ்வாறு உபதேசத்தை வழங்கிவிட்டு  நான் தேநீர் அருந்துவதற்காக சற்று வெ ளியே சென்றேன். தேநீர் அருந்திவிட்டு மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து  கொண்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

Image result for ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன virakesari

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விடயத்தில்  இரண்டு ஒப்பரேஷன்களை செய்துவிட்டேன்.  எனவே குற்றவாளிகள் சிறைக்கு செல்வது உறுதி என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

எல்பிட்டியவில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 

நேற்று ( நேற்று முன்தினம்)  நான் அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு ஒரு உததேசத்தை வழங்கினேன். அதனை இன்று ( நேற்று)  ஊடகங்கள் பல்வேறு  விதமாக அறிக்கையிட்டுருந்தன. அங்கு இருந்த அமைச்சர்கள் இப்போது இங்கும் இருக்கின்றனர். 

பெளத்த கோட்பாட்டை கூறியே நாம் நேற்று அமைச்சர்களுக்கு உபதேசம் வழங்கினேன். தவறு செய்த எவரும் எங்கும் ஒழிந்துவிட முடியாது. அது தொடர்பாகவே நான் 35 நிமிடங்கள் உபதேசம் வழங்கினேன். இவ்வாறு அரசாங்கத்தை நடத்த முடியுமா என்பது குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு கூறிவிட்டு நான் தேநீர் ஒன்று குடிக்க சென்றுவிட்டேன் . 

மீண்டும் வருவதாக கூறியே தேநீர் குடிக்க சென்றேன். அதன் பின்னர் நான் வந்து அமைச்சரவை பணிகளை முன்னெடுத்தேன். கடந்த களத்தில் இந்த நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்ளையாக மத்தியவங்கி கொள்ளை காணப்படுகின்றது. நான் அது தொடர்பாக ஆணைக்குழு அமைத்து விசாரித்தேன். இதனை முதலாவது ஒபரேசன் என்றே கூறுகின்றேன். இரண்டாவது ஒபரேசன் செய்துவிட்டு தான் வந்துள்ளேன். 

இன்று நான் மத்திய வங்கியின் ஆளுநர், ஊழல் விசாரணை ஆணைக்குழு உறுபினர்கள் சட்டமா அதிபர் அரச துறைகளின் சட்ட நிபுணர்கள் என அனைவரையும் அழைத்து பேச்சு நடத்திவிட்டே இங்கு வந்தேன். அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு எடுக்க முடியும் என கேட்டுவிட்டு தான் வந்தேன். இதற்கு எவ்வளவு களம் எடுக்கும் என்றும் ஆலோசித்தேன். 

திருடர்களை தண்டிக்கவும் அவர்களை சிறைக்கு அனுப்பவும் தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டே இந்தக் கூடத்திற்கு வந்துள்ளேன். தேவையான தீர்மானங்களை எடுத்துவிட்டேன். புதிதாக மூன்று சட்டமூலங்கள் கொண்டுவரப்படவுள்ளன. இதன் மூலம் மீண்டும் இந்த நாட்டில் மத்திய வங்கி கொள்ளை இடம்பெறாது  பார்த்துக்கொள்வோம் என்றார்.