எம்பிலிப்பிட்டிய, செவனகல - கட்டுபிலகம பகுதியில் இன்று (18) அதிகாலை  வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானார்.

இதில் கொல்லப்பட்டவர் உடவளவை, வளவ்வேகம பகுதியைச் சேர்ந்த 39 வயது குடும்பஸ்தர் என்று தெரியவந்துள்ளது.

அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், குடும்பஸ்தரின் வீட்டினுள் நுழைந்து அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் கடும் காயங்களுக்கு உள்ளான குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே மரணமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொலைக்கான காரணம், கொலையாளி யார் என்பன குறித்து செவனகல பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.