பெண்களுக்கு மது விற்பனை நிலையத்தில் பணியாற்றவும் மது வாங்கவும் வழங்கப்பட்டிருந்த அனுமதியைத் தடை செய்த ஜனாதிபதியின் கருத்தை எதிர்த்து பெண்கள் சிலர் மீயுயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இலங்கையில் பெண்கள் மது விற்பனை நிலையங்களில் பணியாற்றவோ, மது வாங்கவோ விதிக்கப்பட்ட தடையை சுமார் நாற்பது ஆண்டுகளின் பின் நிதியமைச்சு விலக்கி வர்த்தமானி அறிவித்தல் விடுத்திருந்தது.

எனினும், நேற்று (16) நிதியமைச்சின் அறிவித்தலை இரத்துச் செய்வதாக ஜனாதிபதி அறிவித்தார்.

இதையடுத்து, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, ஜனாதிபதியின் இந்தத் தடை குறித்து 21 வயதுக்கு மேற்பட்ட 7 பெண்கள் மீயுயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.