வேலைநிறுத்தத்தில் இறங்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

முன்னதாக, இன்று பிற்பகல் மின்சார சபைத் தலைவரை ஊழியர்கள் தலைமை அலுவலகத்தினுள்ளேயே சிறைப்பிடித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபை தலைமை அலுவலகப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கலகம் அடக்கும் பொலிஸார் வருகை தந்து மின்சார சபைத் தலைவரை மீட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தலைவரை மீட்கும் முயற்சியில் தாம் தாக்கப்பட்டதாகக் கூறியே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.