“தற்போதைய அரசில் இருக்கும் தலைவர்கள் பலரும் ‘வெட பெரி டார்ஸன்’கள்தாம்!” (சாகசம் செய்ய முடியாத டார்சன்கள்) என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பிங்கிரியவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஊடகங்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“நல்லாட்சியின் வழிகாட்டலின் கீழ் நாட்டின் எந்தத் துறையும் அபிவிருத்தியடையவில்லை. அரசின் முடிவுகள் குறித்து மக்களும் விழிப்புணர்வுடன் இல்லை. பெண்கள் குறித்து இயற்றப்பட்ட சட்டங்கள், இயற்றப்பட்ட உடனேயே இரத்துச் செய்யப்பட்டன. ஆனால் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட பெண்கள் யாரும் முன்வரவில்லை. பெண்களுக்கு மது விற்பனை செய்வதை வர்த்தமானி அளவில் தடை செய்துவிட்டாலும் அது இன்னும் வெற்றிகரமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.