இலங்கை, பங்களாதேஷ், ஸிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் ஸிம்பாப்வேயிடம் இலங்கை தோல்வியைத் தழுவியது.

வெற்றிக்கு மிக அருகாமையில் வந்த இலங்கை அணி வெறும் பன்னிரண்டு ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி ஸிம்பாப்வே அணியை முதலில் துடுப்பாடப் பணித்தது.

அதன்படி களமிறங்கிய அவ்வணி, ஐம்பது ஓவர்கள் முடிவில் ஆறு விக்கட்களை மட்டும் இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய ஹமில்டன் மஸகட்ஸா பத்து பவுண்டரிகள் அடங்கலாக 73 ஓட்டங்களைக் குவித்தார்.

மத்தியகள வீரராகக் களம் புகுந்த சிக்கந்தர் ராஸா ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்கள் பெற்றார். 

இலங்கை சார்பில் அசேல குணரத்ன 37 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கட்களைப் பறித்தார்.

291 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா (80), திசர பெரேரா (64) தவிர, ஏனையவர்கள் சோபிக்கவில்லை. 

இறுதியில், பதினொரு பந்துகள் மீதமிருந்த நிலையில், பன்னிரண்டு ஓட்டங்கள் எடுக்க முடியாமல் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது.