குளிர்கால ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வில், கொரிய தீபகற்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரே கொடியின் கீழ் அணிவகுப்பு நடத்த வட-தென் கொரிய நாடுகள் சம்மதித்துள்ளன. இத்தகவலை தென்கொரியா வெளியிட்டுள்ளது.

இராணுவத் தவிர்ப்பு வலயம் குறித்து மேற்படி இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி போட்டிகளில் பெண்களுக்கான பனிச்சறுக்கு ஹொக்கி போட்டியில் இரு நாட்டு வீராங்கனைகளும் ஒரே அணியாக இணைந்து விளையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.