கைபேசியை தாயின் வாய்க்குள் திணித்துக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை, ஊவாபரணகமவின் மொரகொல்ல பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணாமல்போன தனது தாயைத் தேடி தானும் தனது மனையியும் பதினைந்தாம் திகதி இரவு வெளியே சென்றதாகவும் நேற்று (16) காலை வீடு வந்தபோது தாயைப் பிணமாகக் கண்டதாகவும் குறித்த நபர் பொலிஸில் புகாரளித்தார்.

இதையடுத்து, தாயின் சடலம் பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவர்கள், மூச்சுத் திணறியே உயிர் பிரிந்திருப்பதாகவும் அதற்கு கைபேசி ஒன்று பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, மகன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.