நாட்டின் இணையதள சேவை வழங்குவோரில் முன்னணியில் இருக்கும் SLT ப்ரோட்பேண்ட் சேவை 2018 இல் இந்த துறையில் புரட்சி ஒன்றை ஏற்படுத்தி தனது பக்கேஜுக்கான விலையில் 75 வீதம் வரையான மேலதிக டேடாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன்படி செலுத்தப்படும் கட்டணத்திற்கு அதிக பெறுமதியான சேவையை அனுபவிக்கும் SLT ப்ரோட்பேண்ட் பாவனையாளர்கள் அந்த பெறுமதியை மேலும் அதிகரித்துக் கொண்டு வாழ்க்கை முறையில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்லும் அவர்களின் டிஜிடல் தேவையை குறைவின்றி பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டேடா அளவை அதிகரித்துக் கொள்வது, தற்போதும் இந்த சேவையை பெறும் SLT பாவனையாளர்கள் மற்றும் புதிதாக இந்த சேவையை பெற இணையும் புதிய இணைப்புகள் உள்ளடக்கப்பட்டதாகும். இதன்படி நாட்டில் அதிக ஸ்திரமான, தடங்கலற்ற மற்றும் வேகமான இணையதள தொடர்புகளுடன் வேறு எந்த மேலதிக கட்டணமுமின்றி அதிகம் அதிகமான இணையதளத்தில் பயணிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

இத்தோடு, இலங்கையுடன் தொடர்புடைய வேறு எந்த சேவையுடனும் ஒப்பிட முடியாததும் செலுத்தப்படும் கட்டணத்திற்கு கிடைக்கும் பெறுதியில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ப்ரோட்பேண்ட் சேவையாக SLT ப்ரோட்பேண்ட் பெற்றிருக்கும் வரவேற்பு மேன்மேலும் அதிகரிக்கும். இதன்மூலம் மாதத்திற்கு 3000க்கும் அதிக கிகா பைட் டேடா கொடுப்பனவுடன் வருடம் முழுவதும் நம்ப முடியாத கொடுப்பனவுகளை வழங்குவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சோவையில் வழங்கப்படும் 100Mbps வேகம் கொண்ட தொடர்புடன் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டிஜிடல் தேவைக்கு முன் Wi-Fi  தொழில்நுட்பத்தின் ஊடே குறிப்பிட்ட பல உபகரணங்களுக்கும் ஒரே நேரத்தில் அதனை ஈடுபடுத்த முடியும். SLT ப்ரோட்பேண்ட் தனது பாவனையாளர்களுக்கு தேசிய Fibre Optics    தொழில்நுட்ப வலையமைப்பு ஊடே சர்வதேச தரத்திலான அதிவேக இணையதள தொடர்பொன்றை அனுபவிக்கும் வாய்ப்பொன்றை எற்படுத்திக் கொடுத்துள்ளது. 

உயர்தரத்திலான சிறப்பான ப்ரோட்பேண்ட் அனுபவம் ஒன்றை இந்நாட்டின் அனைவரும் பெறுவதற்கு முடியுமாக நாடு பூராக பரவியிருக்கும் தனது வலையமைப்பை நாளுக்கு நாள் அனைத்து வகையிலும் பலம்பெறச் செய்ய SLT பிரோட்பேண்ட் சேவை செயற்படுகிறது. இதன் பிரதிபலனாக உங்கள் விரல் நுணியில் அதிகமான தகவல்களை திரட்டி முழு நாட்டையும் ஒருவருக்கு ஒருவர் தொடர்புபடுத்துவதோடு உலகத்துடன் தொடர்பை ஏற்படுத்த SLT  பிரோட்பேண்ட் சேவையால் முடிந்துள்ளது. 

Fibre, ADSL  மற்றும் LTE ஆகிய தொழில்நுட்பங்கள் மூலம் பலம்பெறச்செய்யப்பட்ட SLT ப்ரோட்பேண்ட் சேவை 1212 மூலம் 24 மணி நேரமும் தொடர்பை ஏற்படுத்தக் கூடிய பாவனையாளர் சேவை இலக்கத்தையும் கொண்டுள்ளது. இந்த சேவை தொடர்பில் மேலதிக தகவல்களை www.slt.lk    இணையதளத்தின் ஊடாகவோ அல்லது pr@slt.lk மின்னஞ்சல் ஊடாகவோ பெற முடியும். 

நாட்டின் முதல் நிலை பிரோட்பேண்ட் சேவை என்ற அடிப்படையில் தனது மாத பெக்கேஜ் கட்டணம் அவ்வாறே இருக்க அதன் டேடா அளவை 75 வீதம் வரை அதிகரிப்பது, ஏனைய ப்ரோட்பேண்ட் சேவைகளுக்கு நிகராக SLT  பிரோட்பேண்ட் மூலம் தனது பாவனையாளர்களுக்கு வழங்கும் சிறப்பான சலுகையாகும். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக தமது பாவனையாளர்களுக்கு இவ்வாறான கொடுப்பனவுகளை வழங்குவது, இந்த சேவை வழங்குவதில் ஏனைய போட்டியாளர்களிடையே SLT  பிரோட்பேண்ட் தனித்து விளங்கும் சிறப்பான அம்சமாகும்.