(ரொபட் அன்டனி )

மதுபானம் தொடர்பாக பெண் ஊடகவியலாளர்களின் கேள்வி மற்றும் அமைச்சரவை பேச்சாளரின் பதில்களால் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் காரசாரமான வாதப்பிரதிவாதம் நிலவியது.

ஆண்களைப்போன்று பெண்களுக்கும் சமவுரிமை வழங்கப்படவேண்டும். மதுவைக் குடிப்பதா அல்லது குடிக்காமல் விடுவதா என்பதை தீர்மானிப்பது பெண்கள். ஆனால் சட்டத்தால் அதை தீர்மானிக்க முடியதென பெண் ஊடகவியலாளரொருவர் கேள்வியெழுப்பினார்.

இலங்கையில் மேற்கத்தேய நாடுகளைப்போன்று பெண்களும் மது விற்பனையில் ஈடுபடுவதற்கும் அனுமதிவழங்க முடியாது.

நகரத்தில் வாழும் 5 சதவீத பெண்களின் விருப்பத்திற்காக நாட்டின் ஏனை பெண்களையும் அதற்குள் தள்ளிவிட முடியாது.

மதுவுக்கு முற்றுப்புள்ளினெ நாம் கூறிக்கொண்டு இருக்கும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்க முடியாதென சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன பதிலளித்தார்.

இதேவேளை, அமைச்சரவை இணைப்பேச்சாளர் தயாசிறி ஜயசேகரவும் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்தவின் கருத்தையே தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஊடக மத்திய நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.