சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்

Published By: Robert

17 Jan, 2018 | 03:37 PM
image

அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Image result for சபாநாயகர் கரு ஜயசூரிய virakesari

அத்துடன், எதிர்வரும் 23ஆம் திகதி பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கையின் 34 தொகுதி அடங்கிய பிரதிகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

225 பாரா­ளு­மன்ற உறுப்பினர்களுக்கும் மொழிபெயர்ப்புடன் அறி­க்கையை பெற்­றுக்­கொடுக்க அரச மொழியாக்க திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மத்­திய வங்கி பிணை­முறி விசா­ரணை அறிக்கை இன்று நண்பகல் சபாநாயகர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் மேற்படி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி செயலகத்தின் சட்ட அதிகாரியால், பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கையின் 25 பிரதிகளும், பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மத்­திய வங்கி பிணை­முறி கொடுக்கல் வாங்கல் ஊழல் விவ­காரம் குறித்து பாரிய சர்ச்சை எழுந்த நிலையில் உண்­மை­களை கண்­ட­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால  சிறி­சே­ன­வினால்  ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. இந்த ஆணைக்­குழு  பத்து மாதங்கள் சந்­தே­கத்­துக்­கு­ரிய சகல தரப்­பையும் விசா­ரணை செய்­த­துடன் ஆணைக்­குழு தயா­ரித்த அறிக்­கை­யினை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம்  திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஒப்­ப­டைத்­தது. 

இந்­நி­லையில் குறித்த விசா­ரணை அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்ள விடை­யங்கள் குறித்து ஜனா­தி­பதி ஒரு சாராம்ச தக­வ­லாக வெளி­யிட்­டி­ருந்த நிலையில் முழு­மை­யான அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் எனவும் வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்தார். இந்­நி­லையில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யினை உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­கோரி எதி­ர­ணிகள் அழுத்தம் கொடுத்த நிலையில் இன்று குறித்த விசா­ரணை அறிக்கை ஜனா­தி­ப­தியின் அனு­ம­தி­யுடன் பாரா­ளு­மன்­றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22