வரலாற்று சிறப்புமிக்க கப்பல் ஒன்று இலங்கை கடல் தொல்பொருளியல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காலி துறைமுகத்திற்கு ஏழு கடல் மைல்கள் தொலைவில், 30 மீற்றர் ஆழ் கடலிலேயே பிரித்தானிய ரோயல் தபால் சேவைக்காக பயன்படுத்தப்பட்ட  "RMS RANGOON" என்ற மிக பழமையானதும்,  தொல்லியல் மதிப்பு கொண்ட கப்பலே தொல்பொருளியல் பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

"ROYAL MAIL SHIP" என்பதனை குறிக்கும் வகையிலேயே இந்த கப்பல் "RMS" என்று அழைக்கப்படுகின்றது.

நீராவி சக்தியில் இயங்கும் இந்த கப்பல் 1871ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி காலி கடலில் மூழ்கியதாக கூறப்படுகின்றது.

மத்திய கலாச்சார நிதியினால் மேற்கொள்ளப்பட்ட கடல் ஆய்வின் ஊடாக இந்த கப்பலின் பல முக்கிய பாகங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.