கிழக்குப் பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள் ஆறு அம்சக் கோரிகைகளை முன்வைத்து இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக முன்றில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக் கணக்கான கல்விசார ஊழியர்கள் கலந்துகொண்டனர். 

ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவை 5 வருடத்திற்குள் 100 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை 2018 ஜனவரி மாதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டியிருப்பினும் இது தொடர்பான சுற்று நிரூபம் இதுவரை வெளியிடப்படவில்லை.

2017 ஜூன் மாதம் 15 ஆம் திகதி மானியங்கள் ஆணைக்குழு சுற்றுநிருபம் 13/017 மூலம் ஒரு சாராருக்கு மாத்திரம் 15 சதவீதம் கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன் அக் கொடுப்பனவானது இதுவரையிலும் கல்விசாரா ஊழியர்குழுவினருக்கு வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்காமை.

கொடுப்பனவு 2016.01.01 மீள்சீர்திருத்தம் செய்யப்பட்டு வழங்க நடவடிக்கையெடுக்காமை. நிறுத்தப்பட்டிருந்த மொழி திறன் கொடுப்பனவை மீண்டும் வழங்க இதுவரையில் நடவடிக்கையெடுக்காமை.

பல்கலைக்கழக அமைப்புக்களிடையே அறிமுகப்படுத்தப்பட்ட சொத்துக்கள் கடன் திட்டத்தில் பாதி அளவிலான கடனை வழங்கல் என்ற நியதியை நீக்கி சகல ஊழியர்களுக்கும் அதிகபட்ச கடன் தொகையாக இரண்டு மில்லியன் வழங்கல்.

சுகல பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் திறன் மிக்க வைத்திய காப்புறுதித்திட்டம், ஓய்வூதியத்திட்டம் அமைப்பதற்கான பயன் தரக்கூடிய செயற்றிட்டமொன்றினை இதுவரை நடைமுறையில் இல்லைநடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சொத்துக் கடன் தொகையை அதிகரி, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரே கல்விசாரா ஊழியர்களை புறந்தள்ளாதே, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவே ஆட்சேர்ப்பு திருத்தலின் போது எம்மையும் உள்வாங்கு, பல்கலைக் கழக ஊழியர்களுக்கான காப்புறுதித் திட்டம் எங்கே, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவே சிறந்த ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்து, பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவே நலன்மிக்க காப்புறுதித் திட்டத்தை அமுல்படுத்து, ஊழியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு எங்கே? ஊழியர்களின் மாதாந்த கொடுப்பனவை 20 சதவீதத்தினால் அதிகரி போன்ற வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை ஏந்திய கோசங்களையெழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.