ரஷ்ய ரொசடம் அரச கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு…!

Published By: Robert

17 Jan, 2018 | 02:16 PM
image

இலங்கை வந்திருக்கும் ரஷ்ய ரொசடம் அரச கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர்.

ரொசடம் நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் நிகொலாய் ஸ்பாஸ்கி உள்ளிட்ட 5 பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இலங்கையின் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆய்வுத் துறையின் முன்னேற்றத்திற்கு புலமைப்பரிசில்களை வழங்குதல் மற்றும் மின்சக்தி, கைத்தொழில், விவசாயம் போன்ற பல துறைகளில் இருநாடுகளுக்கிடையில் கூட்டுறவை மேம்படுத்தும் நோக்குடன் இவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

மின்சக்தி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப ஆய்வு அமைச்சுகளுடன் இணைந்து இதற்காக நீண்டகால, குறுங்கால நிகழ்ச்சித் திட்டங்களை தயாரிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்துவரும்  உறவுகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ரஷ்யா இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளை பாராட்டினார்.

குறிப்பாக அண்மையில் தேயிலை ஏற்றுமதி தொடர்பில் எழுந்த பிரச்சினையை உடனடியாக தீர்த்து இலங்கை நாட்டிற்கும் மக்களுக்கும் வழங்கிய இதய பூர்வமான ஒத்துழைப்பு குறித்து ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புட்டினுக்கு ஜனாதிபதி தனது விசேட நன்றியைத் தெரிவித்தார்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மெடரி ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51