பிணை­முறி அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.!

Published By: Robert

17 Jan, 2018 | 12:54 PM
image

மத்­திய வங்கி பிணை­முறி விசா­ரணை அறிக்கை சற்று முன்னர் சபாநாயகர் அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

Image result for பிணை­முறி அறிக்கை virakesari

ஜனாதிபதி செயலகத்தின் சட்ட அதிகாரியால், பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கையின் 25 பிரதிகளும், பாரிய ஊழல், மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதியும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாரா­ளு­மன்ற இணை­ய­த்த­ள­ மூ­டாக அறி­க்கையை பெற்­றுக்­கொள்ள முடியும் எனவும்  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மேலும் மத்­திய வங்கி பிணை­முறி ஊழலில் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்கும் பொறுப்பை நானே தனிப்­பட்ட முறையில் ஏற்­றுக்­கொள்வேன் என ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மத்­திய வங்கி பிணை­முறி கொடுக்கல் வாங்கல் ஊழல் விவ­காரம் குறித்து பாரிய சர்ச்சை எழுந்த நிலையில் உண்­மை­களை கண்­ட­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால  சிறி­சே­ன­வினால்  ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. இந்த ஆணைக்­குழு  பத்து மாதங்கள் சந்­தே­கத்­துக்­கு­ரிய சகல தரப்­பையும் விசா­ரணை செய்­த­துடன் ஆணைக்­குழு தயா­ரித்த அறிக்­கை­யினை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம்  திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் ஒப்­ப­டைத்­தது. 

இந்­நி­லையில் குறித்த விசா­ரணை அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்ள விடை­யங்கள் குறித்து ஜனா­தி­பதி ஒரு சாராம்ச தக­வ­லாக வெளி­யிட்­டி­ருந்த நிலையில் முழு­மை­யான அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் எனவும் வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்தார். இந்­நி­லையில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யினை உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­கோரி எதி­ர­ணிகள் அழுத்தம் கொடுத்த நிலையில் இன்று குறித்த விசா­ரணை அறிக்கை ஜனா­தி­ப­தியின் அனு­ம­தி­யுடன் பாரா­ளு­மன்­றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50