எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

Published By: Robert

17 Jan, 2018 | 12:37 PM
image

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்குபற்றவிருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,

’ எம் ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் நேரம் ஒதுக்கி தந்தவுடன் சென்னையில் பிரம்மாண்டமாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்படும்.

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்.

பட்ஜட் தயாரிப்பிற்கு முந்தைய கூட்டம் டில்லியில் நடைபெறுகிறது. அதில் பங்குபற்றுவதற்காக டில்லிக்கு செல்லவிருக்கிறேன். அப்போது பிரதமரை சந்திப்பேன். அதன் போது காவிரி பிரச்சினை குறித்து பேசப்படும். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே கருத்து தெரிவித்து, தீர்ப்பை ஒத்திவைத்திருக்கிறது. இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையிலேயே கர்நாடக முதல்வருக்கு நீரை பகிர்ந்தளிக்க கோரி கடிதம் எழுதப்பட்டது. அதன் பதில் என்னவென்று அனைவருக்கும் தெரியும்.

தினகரன், கமல், ரஜினி யார் தனிக்கட்சி தொடங்கினாலும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தாலும் அதிமுகவிற்க எந்த பாதிப்பும் ஏற்படாது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகவே உள்ளது.

அதிமுகவிற்கு என பிரத்யேக நாளிதழ் ஒன்று விரைவில் வெளியிடப்படும்.

ஹஜ் புனித யாத்திரை மானிய ரத்து குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்.’ என்றார்.

முன்னதாக எம்ஜிஆரின் 101 ஆவது பிறந்த நாளான இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அதிமுகவின் அமைச்சர்கள் பலரும், நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்குபற்றி மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17