அதிமுக அம்மா என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக சட்டமன்ற உறுப்பினர் ரி.ரி.வி தினகரன் தெரிவித்திருக்கிறார். 

இது தொடர்பாக அவர் கோத்தகிரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,

‘புதிய கட்சி தொடங்குவது உட்பட பல விடயங்கள் பரிசீலனையில் உள்ளது. ‘அ.தி.மு.க. அம்மா’ பெயரை பயன்படுத்த அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்படும். இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் மீட்டெடுப்போம். சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால், ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் உள்ளிட்ட சிலரைத் தவிர அ.தி.மு.க.வில் உள்ள அனைவரும் எங்களுடன் இணைவார்கள். ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டு கொடுத்து வெற்றிபெற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவேன் என உறுதி அளித்ததால் மக்கள் என்னை வெற்றி பெற செய்தனர். அ.தி.மு.க.வின் குழப்பத்திற்கு, மத்திய அரசு தான் காரணம். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் போது ஸ்லீப்பர் செல்கள் வெளியேறுவார்கள்.’ என்றார்.

தகவல் : சென்னை அலுவலகம்