அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிறந்த தேக ஆரோக்கியத்துடன் உள்ளதாக வெள்ளை மாளிகை வைத்தியர் றொனி ஜக்ஸன்  தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ட்ரம்ப்பின் தேக ஆரோக்கியம் பற்றி அவர் விளக்கமளித்தபோது,

"அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சிறந்த ஆரோக்கியத்துடன் உள்ளாரென்பதுடன், அவரது அறிவாற்றல் திறன் மற்றும் நரம்பியல் செயற்பாடும் சிறந்த முறையிலுள்ளது. ஆகவே இவரது தேக ஆரோக்கியம் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, 

இருப்பினும் 71 வயதுடைய ட்ரம்ப் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் மேலும் கொழுப்புச் சத்து உணவைக் கட்டுப்படுத்த வேண்டும்" எனவும்  கூறியுள்ளார்.

எழுத்தாளர் மைக்கேல் வோல்ஃப் அண்மையில் வெளியிட்ட "ஃபைர் அன்ட் ஃப்யூரி" எனும் நூலில், அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பதற்கு ட்ரம்ப் தகுதியானவரா என்ற சர்ச்சை எழுப்பட்டிருந்தது.

இந்த சர்ச்சைக்கு மறுப்புத் தெரிவித்திருந்த ட்ரம்ப்,

3 மணிநேர வைத்தியப் பரிசோதனையைஇ கடந்த வாரம் மேற்கொண்டார். இந்த சர்ச்சையில் சிக்கியுள்ள ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த வாரமே முதற்தடவையாக வைத்தியப் பரிசோதனை செய்துகொண்டார்.