கொலம்பியாவின் சொகோவியா நகரில் இராணுவத்தினருக்குச் சொந்தமான ரஷ்யாவின் தயாரிப்பான எம்.ஐ.71  இலக்கமுடைய ஹெலிகொப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான வேளையில்  ஹெலிகொப்டரில் 8 இராணுவத்தினரும் 2 பொதுமக்களும் இருந்துள்ளனர். இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சடலங்களை மீட்கும் நடவடிக்கையை அந் நாட்டு  இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.