யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் விரிவுரைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலை பீடத்தின் 3ஆம் மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கிடையே கடந்த 11 ஆம் திகதி மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, கலைபீடத்தின் 3 ஆம் மற்றும் 4 ஆம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்கும் வகுப்புத் தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் விரிவுரைகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை வியாழக்கிழமை முதல் அனைத்து விரிவுரைகளும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.