பாட­சாலை சூழலை பாது­காக்க தவறும் அதி­பர்­க­ளுக்கு எதி­ராக கடும் நட­வ­டிக்கை

Published By: Robert

17 Jan, 2018 | 11:27 AM
image

பாட­சாலை வளா­கத்தை முழு­மை­யாக சுத்­த­மாக வைத்­தி­ருக்க வேண்­டிய பொறுப்பு பாட­சா­லையின் அதி­பர்­க­ளையே சாரும். அத்­துடன் டெங்கு ஒழிப்பு வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்­டிய பொறுப்பும் அதி­பர்­க­ளு­டை­யதே. இதனை முறை­யாக செய்­யாத அதி­பர்கள் தொடர்­பாக கடும் நட­வ­டிக்கை எடுக்க கல்வி அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது என மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலை­வரும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிர­தி­த­லை­வரும் கல்வி இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்­துள்ளார்.

Image result for வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன்

இது தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். தொடர்ந்து அந்த அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

கடந்த சில நாட்­களில் சில பாட­சா­லை­களில் டெங்கு நோயினை பரப்பும் நுளம்பின் ஆக்­கி­ர­மிப்பு அதி­க­ரித்­துள்­ள­தாக ஊட­கங்கள் மூல­மாக அறிந்­து­கொள்­ள­மு­டிந்­துள்­ளது. இது தொடர்­பாக நாம் கல்வி அமைச்சு என்ற ரீதியில் உட­ன­டி­யாக கவனம் செலுத்­தி­யுள்ளோம்.

கல்வி அமைச்சின் அறி­வு­றுத்­த­லின்­படி அனைத்து பாட­சா­லை­க­ளிலும் அதன் வளா­கங்­களை சுத்­த­மாக பேணி பாது­காக்க வேண்­டிய பொறுப்பு அந்­தந்த பாட­சா­லை­களின் அதி­பர்­க­ளு­டை­ய­தாகும். இது தொடர்­பாக கல்வி அமைச்சு அதி­பர்­க­ளுக்கு தௌிவு­ப­டுத்­தி­யுள்­ளது. அது­மட்­டு­மல்­லாமல் ஒரு­சில பாட­சா­லை­களில் டெங்கு ஒழிப்பு தொடர்­பாக தேசிய வேலைத்­திட்­டத்­தையும் கல்வி அமைச்சின் மூல­மாக முன்­னெ­டுத்­துள்­ளது. 

தொடர்ந்தும் கல்வி அமைச்சு இது தொடர்­பான அறி­வித்­தல்­களை விடுத்­து­வ­ரு­கின்­றது. அண்­மையில் பாட­சா­லையின் புதிய ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட பொழுது அனைத்து பாட­சா­லை­க­ளிலும் சுற்றுச் சூழ­லை­ சுத்தம் செய்­யு­மா­று­ அ­தி­பர்­க­ளுக்­கு­ அ­றி­வு­றுத்தல் வழங்­கி­யுள்­ளது. எனவே அதி­பர்கள் இதனை முன்­னெ­டுக்க வேண்டும். இதற்­காக அவர்கள் தங்­க­ளு­டைய பகு­தியில் இருக்­கின்ற உள்­ளூ­ராட்சி மன்­றங்கள், சுகா­தார அதி­கா­ரிகள் ஆகி­யோ­ரு­டைய ஒத்­து­ழைப்­பையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்­வாறு சுற்றுச் சூழலை சுத்தம் செய் யாத பாடசாலை அதிபர்கள் தொடர்பாக கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்படுமானால் அவர்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02