ஆண்­க­ளுக்கு மது­பா­ன­சாலை திறக்க முடி­யு­மாயின் பெண்­க­ளுக்கும் மது­பான சாலைகள் திறக்க முடியும். எனவே அர­சாங்கம் எடுத்த நட­வ­டிக்­கை­களில் தவ­றுகள் கிடை­யாது என பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது 2000 விகா­ரை கள் மூடப்­பட்­ட­துடன்  2000 மது­பான சாலை கள் திறக்­கப்­பட்­ட­தாகவும் அவர் குறிப்­பி­ட்டார்.

Image result for சரத் பொன்­சேகா virakesari

கம்­ப­ஹாவில் நடை­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மது­பா­ன­சாலை தொடர்­பான வர்த்­த­மானி தொடர்பில் பல்­வேறு கருத்­து­களை முன்­வைக்­கின்­றனர். எனினும் முன்­னைய ஆட்­சியின் போது  2000 விகா­ரைகள் மூடப்­பட்­ட­துடன் 2000 மது­பான சாலைகள் திறக்­கப்­பட்­டன. இதனை பற்றி யாரும் பேச­வில்லை.  எனவே அப்­போது ஆரம்­பித்த பணி­களே தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

அத்­துடன் பெண்­களும் மது­பா­ன­சா­லைகள் திறக்க முடியும் என்ற தீர்­மா­னத்தில் எந்­த­வொரு தவறும் கிடை­யாது. ஏனெனில் ஆண்­க­ளினால் மது­பா­ன­சா­லை­களை திறக்க முடி­யு­மாயின் பெண்­க­ளுக்கு மது­பா­ன­சா­லை­களை திறக்க முடியும். வெளி­நா­டு­களில் பெண்கள் விமானம் ஓட்­டு­கின்­றனர். மது­பானம் அருந்­து­கின்­றனர். எனவே இலங்­கையில் அவ்வாறு செய்வதற்கு அனுமதி வழங்குவதில் தவறு கிடையாது. 

ஆண்களுக்கு செய்ய முடியுமானவை பெண்களுக்கும் செய்ய முடியும் என்றார்.