மஹிந்­த­விடம் அப்பம் உண்­டு­விட்டு அவ­ருக்கே துரோகம் செய்­ததை போல் எமது ஆத­ரவில் ஜனா­தி­ப­தி­யாகி எமது முதுகில் குத்தும் செயற்­பாட்டை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னெ­டுத்து வரு­கின்றார் என்று   ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம். மரிக்கார் தெரி­வித்தார். 

Image result for எஸ்.எம். மரிக்கார் virakesari

எம்மை திருடர் என கூறும் ஜனா­தி­ப­தியும் ஒரு பிக்­பொக்­கட்­காரர் என்­பதை  மறந்­து­விட வேண்டாம் எனவும் அவர்  குறிப்­பிட்டார்.  

நேற்று முன்­தினம் கொழும்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேர்தல் பிரசாரக் கூட்­ட­மொன்றில் கலந்­து­கொண்­ட­போது அவர் இதனைக் குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறி­ய­தா­னது, 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பொது எதி­ர­ணி­யுடன் இணைந்து தேர்­தலில் செயற்­பட்டால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்க முடி­யாது. ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து அர­சாங்­கத்தை நடத்­தவும்  பொது எதி­ர­ணி­யுடன் இணைந்து தேர்­தலில் கள­மி­றங்­கவும் என இரண்­டையும் அவர்­களால் செய்ய முடி­யாது. 

இந்த விட­யத்தை நான் தொடர்ச்­சி­யாக பிர­த­ம­ருக்கு தெரி­வித்து வந்­துள்ளேன். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி பொது அணி­யுடன் இணை­வதா அல்­லது தனித்து செயற்­ப­டு­வதா என்­பது அவர்­களின் பிரச்­சினை. அது குறித்து நாங்கள் தீர்­மானம் எடுக்க முடி­யாது. ஆனால் அவர்கள் இணைந்தால் அர­சாங்­கத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அங்கம் வகிக்க முடி­யாது. 

நடை­பெறும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி பல இடங்­களின் தனித்து   சபையை  அமைக்கும் . சில சபை­களில் எமக்கு பெரும்­பான்மை கிடைக்­காது போகும். அவ்­வா­றான இடங்­களில் நாம் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்தின் பிர­தி­ப­லிப்பை போலவே சபை­க­ளையும் உரு­வாக்­குவோம். பிர­தேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பொது எதி­ர­ணி­யுடன் இணைந்து சபை அமைத்தால் தேசிய அர­சாங்­கத்­திலும் அதே நிலை­மையே ஏற்­படும். 

தேசிய அர­சாங்­கத்­திலும் அவர்கள் பொது  எதி­ர­ணி­யு­ட­னேயே கூட்­டணி  அமைக்­க­வேண்­டி­வரும்.  இன்று பொது அணி­யி­னரின் நிலை­மைகள் என்­ன­வென்­பது அனை­வ­ருக்கும் நன்­றாக தெரி­கின்­றது. அவ்­வ­ணியின் பலர் மஹிந்த ராஜபக் ஷவை விட்டு வெளி­யேறி வரு­கின்­றனர். அங்கு எவ்­வா­றான ஊழல் இடம்­பெற்று வரு­கின்­றது என்­ப­தையும் அவர்கள் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். 

தேசப்­பற்­றா­ளர்கள் போன்று நடிக்­கின்­றனர் என அவர்­களே கூறி வரு­கின்­றனர். நாம் கூறும்­போது பொய் என கூறி­ய­வர்­க­ளுக்கு இன்று அவர்­களின் மூல­மா­கவே உண்­மை­களை தெரிந்­து­கொள்ள முடி­கின்­றது. 

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மஹிந்த ராஜபக் ஷவின் கூட்­ட­ணியில் இருந்து மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­யே­றிய போது அவ­ருக்­காக பிரசாரம் செய்ய, சுவ­ரொட்­டிகள் ஒட்ட  ஒரு நாதி­யேனும்  இருக்­க­வில்லை. ஐக்­கிய தேசியக் கட்­சி­யான நாங்­களே அச்­சு­றுத்­த­லுக்கு மத்­தியில், இரா­ணுவ பலத்­திற்கு மத்­தியில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­பதி ஆச­னத்தில் அம­ரச்­செய்து அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொ­டுத்தோம். இந்த நன்­றிக்­கடன் அவ­ரிடம் இன்றும் உள்­ளதா என்­பதை  அவ­ரது மன­சாட்­சி­யி­டமே கேட்­க­வேண்டும். 

இன்று அவ­ருடன் இணைந்து அவரை ஆட்டி வைக்கும் டிலான், சுசில் போன்­ற­வர்கள் அன்று இந்த கூட்­ட­ணியில் இருக்­க­வில்லை. இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பக்கம் இருந்து குர­லெ­ழுப்பும் எவரும் அன்று உத­விக்கு வர­வில்லை. நாமே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து நின்றோம். இவை இன்று அவ­ருக்கு நினைவில் இருக்­குமோ தெரி­ய­வில்லை.

நாம் அவர்­களின் வாலில் தொங்­கிக்­கொண்டு ஆட்­சியில் உள்­ள­தைப்­போன்­றதே இன்று அவர்­களின் நினைப்­பாக உள்­ளது. நாம் அமைத்த அர­சாங்­கத்தில் தொங்­கிக்­கொண்டு வந்­த­வர்­களே அவர்கள் அனை­வரும் என்­ப­தனை  மறந்த அவர்கள் அனை­வ­ருக்கும் எதிர்­வரும் 10 ஆம் திகதி ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­ளர்கள் சிறந்த பாடத்தை கற்­பித்­துக்­கொ­டுப்­பார்கள். 

மஹிந்த ராஜபக் ஷவிடம் அப்பம் உண்­டு­விட்டு இறு­தியில் மஹிந்­த­விற்கே துரோகம் செய்­த­தைப்­போல எமது வாக்கில் ஜனா­தி­பதி ஆகி­விட்டு எமக்கே முதுகில் குத்­தலாம் என்ற எண்­ணத்தில் ஜனா­தி­பதி உள்ளார் .ஜனா­தி­பதி எங்­களை கள்வர் என கூறு­கின்றார். நாங்கள்  திரு­டர்கள்   தான், ஆனால் மஹிந்த ராஜபக் ஷவின் பையில் இருந்து கள­வெ­டுத்து வெளி­யே­றி­யவர் தான் இன்று ஜனா­தி­பதி ஆச­னத்தில் அமர்ந்­துள்ளார். 

அவரும் ஒரு பிக்­பொக்கட் ஜனா­தி­பதி என்­பது அவ­ருக்கும் நினைவில் இல்லை. தானும்  பிக்­பொக்கட் ஜனா­தி­பதி என்­பதை அவர் மறந்துவிடக்கூடாது. அவரை ஜனாதிபதியாக்கியதும் எமது ஜனநாயகவாத மக்கள் என்பது தான் உண்மை. இவர்கள் சத்தமாக  குரல் எழுப்பியவுடன் எமது உறுப்பினர்கள் வாய்மூடி உள்ளனர். இவ்வாறு அமைதியாக இருப்பதால் பலன் இல்லை. குரலெழுப்பும் நபர்களின் செவிகள் கிழியச் செய்யும் அளவிற்கு அறைய  வேண்டும். அது யாராக இருந்தாலும் பரவாயில்லை. அந்த அறை தான் எதிர்வரும் தேர்தலில் நிகழும்  என்றார்.