தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் தடுமாறிய தென்னாபிரிக்கா, 258 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்படி, இப்போட்டியில் வெற்றி பெற இந்தியா 286 ஓட்டங்களை மட்டுமே எடுத்தால் போதும்.

இரண்டாவது இனிங்ஸில் அணித் தலைவர் டுப்ளெஸிஸ் 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டியன் எல்கர் (61), டி வில்லியர்ஸ் (80), பைலேண்டர் (26) ஆகியோர் மட்டுமே ஓரளவு சோபித்தனர். ஏனையோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இந்தியா சார்பில் அபாரமாகப் பந்துவீசிய மொஹமட் ஷமி 49 ஓட்டங்களுக்கு நான்கு விக்கட்களைக் கைப்பற்றினார்.

நான்காவது நாளிலேயே இரண்டாவது இனிங்ஸில் விளையாடத் தொடங்கியிருக்கும் இந்திய அணி, இன்றைய போட்டி நிறைவடைய இன்னும் 90 ஓவர்கள் இருப்பதால், ஒரு நாள் மீதம் வைத்து குறித்த இலக்கைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.