நாட்டின் அனேக பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு சீரான காலநிலையே நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. காலை வேளைகளில் நாடு முழுவதும் மூடுபனி காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின், இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மேல் மாகாணம் மற்றும் கேகாலை பகுதிகளில் மணிக்கு 30 முதல் 40 மைல் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மலையகத்தைப் பொறுத்தவரையில், நுவரெலியாவில் அதிகாலை வேளைகளில் தரையில் உறைபனியைக் காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.