அடுத்த முறை ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிரணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவார் என்றும் அந்தத் தேர்தலில் அவரே வெற்றிபெறுவார் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்லாமல், அதில் கோத்தாபய ராஜபக்சவே வெற்றிபெற்று ஜனாதிபதி நாற்காலியில் அமர்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.