Flora டிஷுக்கள் உற்பத்தியில் ஈடுபடும் Pee Bee மனேஜ்மன்ட் சேர்விசஸ் பிரைவட்  லிமிட்டெட், தனது உற்பத்திச்சிறப்புகளுக்காக அண்மையில் WORLDCOB இனால் வழங்கப்பட்டிருந்த பெருமைக்குரிய BIZZ விருதை தனதாக்கியிருந்தது. 

மேலும், சிங்கப்பூரில் நடைபெற்ற ACES விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆசிய பிராந்தியத்தின் சிறந்த சிறிய, நடுத்தர வியாபாரத்துக்கான விருதையும் பெற்றிருந்தது.

வியாபாரங்களின் உலக சம்மேளனங்கள் (WORLDCOB) அமைப்பால் துபாய் நகரில் நவம்பர் 15 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 13 ஆவது விருதுகள் BIZZ வழங்கும் நிகழ்வு, உலகின் தலைசிறந்த வியாபாரச்சிறப்புகளுக்கான விருதுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளின் பல நிறுவனங்களை இந்த விருதுகள் கௌரவித்துள்ளது. தமது நாடுகளில் தத்தமது துறைகளில் வியாபாரச்சிறப்புகளை பேணி வருகின்றமைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. 

தலைமைத்துவம், முகாமைத்துவ கட்டமைப்புகள், பொருட்களின் தரம் மற்றும் சேவைகள், புத்தாக்கத்திறன் மற்றும் ஆக்கத்திறன்,

சமூகப்பொறுப்புணர்வு செயற்பாடுகள் மற்றும் சாதனைகள் போன்றவற்றின் அடிப்படையில் நிறுவனங்கள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

தற்போது Flora டிஷுக்கள் இலங்கையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான சந்தைப்பங்கை கொண்டுள்ளன. நிறுவனங்கள் மற்றும் பாவனையாளர் பிரிவில் டிஷு தயாரிப்புகளுக்கு அதிகளவு வரவேற்பு காணப்படுகிறது. இதனூடாக வர்த்தக நாமத்தின் பிரத்தியேகமான பெறுமதி மற்றும் உண்மைத்தன்மை ஆகின பிரதிபலிக்கப்பட்டுள்ளன.

நுகர்வோரும் பாரம்பரிய துணி அடிப்படையிலான பொருட்களிலிருந்துரூபவ் தூய்மையானரூபவ் சௌகரியமான டிஷு கடதாசி தயாரிப்புகளை பயன்படுத்த முன்வந்துள்ளனர்.

மேலும், 2017, ஒக்டோபரில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய கூட்டாண்மை சிறப்புகள் மற்றும் நிலைபேறாண்மை விருதுகள் வழங்கும் நிகழ்வில் “ஆசியாவின் சிறந்த சிறிய, நடுத்தரளவு வியாபாரம்” எனும் விருதையும் நிறுவனம் பெற்றிருந்தது. வருடாந்தம் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு Mors குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த விருதுகள் வழங்கலின் ஏற்பாட்டாளர்கள் வியாபாரங்களின் சேவைகள் மற்றும் சாதனைகளை கௌரவிப்பதாக அமைந்துள்ளதுடன் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சமூகங்களுக்கு வழங்கி வரும் பங்களிப்புகளை கௌரவிப்பதாக அமைந்துள்ளது.

Pee Bee மனேஜ்மன்ட் சேர்விசஸ் பிரைவட் லிமிட்டெட் முகாமைத்துவ பணிப்பாளர் கிஷோர் சுர்தானி கருத்துத்தெரிவிக்கையில்,

 “எமது Flora தயாரிப்புகளை பிரத்தியேகமான, தூய்மையான மற்றும் புத்தாக்கமான தயாரிப்புகளாக கருதி பயன்படுத்தும் நுகர்வோர் காரணமாக எமது வர்த்தக நாமம் அனுகூலம் பெறுகிறது.

நுகர்வோருக்கு தொடர்ச்சியாக உயர் தரமான தயாரிப்புகளை வழங்குவதில் வர்த்தக நாமத்தின் வலிமை தங்கியுள்ளது.

அவர்களுடன் உறுதியான பிணைப்பை ஏற்படுத்துவதுடன் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதாகவும் அமைந்துள்ளதுடன், இது சந்தைப்பங்கில் உறுதியாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது” என்றார்.

“நாம் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இரு விருதுகளை சுவீகரித்துள்ளதுடன் 2017 ஆம் ஆண்டை மிகச்சிறப்பாக நிறைவுக்கு கொண்டு வருகிறோம். இது எமக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. 2018 லும் இது போன்ற பல சிறப்புகளை எய்த நாம் தொடர்ந்து முயற்சி செய்வோம். இதில் பல உள்நாட்டு விருதுகளும் அடங்கியிருக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

இலங்கையில் மென்மையான பாவித்த பின்னர் அகற்றக்கூடிய டிஷு கடதாசிகளை அறிமுகம் செய்வதை இலக்காகக்கொண்டு நிறுவப்பட்ட Pee Bee மனேஜ்மன்ட் சேர்விசஸ் பிரைவட் லிமிட்டெட் மற்றும் அதன் முன்னணி வர்த்தக நாமமான Flora டிஷுக்கள் போன்றன சந்தையில் பெரும் பங்கை தம்வசம் கொண்டுள்ளதுடன் SLS சான்றளிக்கப்பட்ட பொருட்களையும் கொண்டுள்ளன. தரத்தில் உயர் மட்டத்தை பேணுவதுடன் தொழில்நுட்பத்தில் உயர்ந்து வருவதுடன் புத்தாக்கம் மற்றும் குழுநிலை செயற்பாடுகளுடன் வியாபார நிபுணத்துவத்தையும் பேணி வருகிறது. தனது வருமானத்தை இரட்டிப்பாக்குவது மற்றும் வர்த்தக நாமப்பெறுமதிகளை அதிகரிக்கச்செய்வது எனும் நான்கு ஆண்டு இலக்குடன் நிறுவனம் இயங்கி வருகிறது. 10 ஊழியர்களிலிருந்து 250 ஊழியர்கள் வரை நிறுவனம் வளர்ச்சியடைந்துள்ளதுடன் 50,000 சதுர அடிகளில் நவீன வசதிகள் படைத்த உற்பத்தி ஆலையையும் விநியோக தொடரையும் ஹோமகம கட்டுவான தொழிற்பேட்டையில் கொண்டுள்ளது.