(எம். எம். சில்வெஸ்டர் )

உத்தேச உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் தபால் மூல வாக்களிப்பில் கலந்துக்கொள்ள உள்ளனர். 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் இடம்பெறவுள்ளது. 

Image result for வாக்களிப்பு virakesari

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றதேர்தல் பணிகளுக்கான அதிகபடியான தபால் மூல வாக்காளர்கள் எண்ணிக்கை குருணாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள  பிரதித்  தலைவர் எச். எம். மொஹமட் தெரிவித்தார்.

இதன்படி குருணாகல் மாவட்டத்தில் தபால் மூல வாக்காளர்கள் தொகை 67 ஆயிரமாக பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கண்டி மாவட்டத்தில் 48 ஆயிரம் பேரும், அநுராதபுர மாவட்டத்தில் 45 ஆயிரம் பேரும் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, இம்முறை தேர்தலில் 5 இலட்சத்து 60 ஆயிரத்து 20 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்க பிரதித்  தலைவர் எச். எம். மொஹமட் தெரிவித்தார்.