டயகம  மேற்கு  2ம் பிரிவில் டயகம தமிழ்ச்சங்கம் மற்றும் பியூச்சர் இளைஞர் கழகமும் இணைந்து கலாச்சார பொங்கல் விழாவை  நேற்று கொண்டாடினர். 

இந்த பொங்கல் விழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெற்றன. குறிப்பாக உரிமரம்  ஏறுதல், சிலம்பாட்டம், கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய தமிழர் விளையாட்டுகள் இடம்பெற்றன. 

இந்த விழாவிற்கு டயகம பொலிஸ் அதிகாரி உட்பட அந்த பகுதியில் உள்ள பாடசாலை அதிபர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். மேலும் யோகா கலை மற்றும் சிலம்பாட்டங்களில் சிறப்பு பயிற்ச்சிகளை பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.