மதுபானசாலை குறித்து கடந்த வாரம் நிதியமைச்சு வெளியிட்ட அறிவித்தலை அரசு மீளப்பெற அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

மதுபானசாலை இயங்கும் நேரத்தை அதிகரித்தும் மதுபானசாலையில் பெண்கள் பணிபுரியும் வாய்ப்பை வழங்கியும் பெண்கள் மதுபானம் வாங்க அனுமதியளித்தும் கடந்த வாரம் நிதியமைச்சு அறிவித்தல் வெளியிட்டிருந்தது.

38 வருடங்களாக இலங்கையில் இருந்த சட்டத்தை மாற்றியே இவ்வறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (14) அகலவத்தையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி, மேற்படி அறிவித்தலை மீளப் பெறுவதாக அறிவித்தார். கலாச்சாரம் மிகுந்த ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இது மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்தே மேற்படி வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெற அமைச்சரவை முடிவுசெய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில், மதுபானசாலை மற்றும் உற்பத்திச் சாலைகளில் பெண்களைப் பணியில் அமர்த்துவதற்கும் பெண்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதற்கும் 1979ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.