இம் முறை இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் விசேட தேவையுடையோர், மாற்றுத் திறனாளிகள் வேறொருவரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

விசேட தேவையுடையோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளராக இருப்போர் 18 வயதை பூர்த்தி செய்தவராக இருப்பதுடன் அவர்  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக இருக்கக்கூடாதென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த நபர் அரசியல் கட்சியின் அங்கீகாரம் பெற்ற முகவராகவோ, வாக்குச் சாவடிக்கான பிரதிநிதியாகவோ இருக்கவும் கூடாது.

இந்நிலையில், உதவியாளரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு மாற்றுத்திறனாளியோ, விசேட தேவையுடையவரோ உரிய காரணங்களை சமர்ப்பிப்பது அவசியம்.

மேலும், இதற்கான விண்ணப்பப்படிவங்களை அந்தந்தப்பகுதி கிராம உத்தியோகத்தர்களிடமிருந்தும் தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலிருந்தும் இது தொடர்பான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.