மரதன் போட்­டி­களில் புதிய தேசிய சாதனை ஒன்றை நிலை­நாட்­டி­யுள்ளார் இலங்­கையின் மரதன் வீராங்­க­னை­யான ஹிருணி விஜே­ரத்ன.

டெக்­ஸாஸின் ஹொட்­சனில் நடை­பெற்ற சர்­வ­தேச மரதன் போட்­டியின் போதே ஹிருணி இந்த புதிய சாத­னையை படைத்தார்.

இதற்கு முன் இலங்கை வீராங்­கனை நிலூகா ராஜ­சே­க­ர­வினால் நிலை­நாட்­டப்­பட்­டி­ருந்த இரண்டு மணித்­தி­யா­லயம் 40 நிமிடம் 7 வினா­டி­களில் அடைந்த பந்­தயத் தூரத்தை, தற்­போது ஹிருணி விஜே­ரத்ன இரண்டு மணித்­தி­யா­லயம் 36 நிமி­டங்கள் 35 வினா­டிகளில் கடந்து இலங்­கையின் தேசிய சாத­னையை புதுப்­பித்­துள்ளார்.

இந்த தேசிய சாத­னை­யுடன் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் கோல்ட் கோஸ்டில் நடை­பெ­ற­வுள்ள கொமன்வெல்த் போட்­டி­களில் பங்­கு­பற்­றவும் தகு­தி­பெற்றார்.

கடந்த ஆண்டு அமெ­ரிக்­காவில் நடை­பெற்ற 2017 Eugene மரதன் ஓட்டப் போட்­டியில் பெண்கள் பிரிவில் ஹிருணி வெற்­றி­பெற்­றி­ருந்தார். 

ஹிருணி விஜே­ரத்ன 2017 Eugene மரதன் போட்­டி­யினை நிறைவு செய்­வ­தற்கு 2:43:31 மணி நேரத்தை எடுத்­துக்­கொண்டார்.

இந்தப் போட்­டியில் ஹிருணி வெளிப்­ப­டுத்­திய நேரத்­திற்­க­மைய அவர் கடந்த ஆண்டு லண்­டனில் நடை­பெற்ற உலக சம்­பி­யன்ஷிப் தட­கள போட்­டியில் பங்­கு­பற்­றவும் தகுதி பெற்றார்.

ஹிருணி அமெ­ரிக்­காவில் வாழ்­வ­தோடு அங்­கி­ருந்து போட்­டிக்­கான பயிற்சி நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றார்.

அதேபோல் மரதன் போட்­டி­களில் சர்­வ­தேச அளவில் மிகப்பெரிய பந்தய மாக கருதப்படும் லண்டன் மரதன் போட்டியிலும் ஹிருணி கலந்துகொண் டிருந்தமை குறிப்பிடத்தக்கது.