இலங்கை - பங்­க­ளாதேஷ் – சிம்­பாப்வே ஆகிய மூன்று நாடுகள் விளை­யாடும் ஒருநாள் முக்­கோணத் தொடரில் நேற்று நடை­பெற்ற முத­லா­வது போட்­டியில் சிம்­பாப்வே அணியை வீழ்த்­திய பங்­க­ளாதேஷ் அணி 8 விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­பெற்­றது.

பங்­க­ளா­தேஷில் நேற்று ஆரம்­ப­மான ஒருநாள் முக்­கோணத் தொடரின் முத­லா­வது போட்­டியில் சிம்­பாப்வே மற்றும் பங்­க­ளாதேஷ் ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்­டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற பங்­க­ளாதேஷ் அணி முதலில் பந்­து­வீச முடி­வு­செய்­தது.

அதன்­படி முதலில் துடுப்­பெ­டுத்­தாட கள­மி­றங்­கிய சிம்­பாப்வே அணி 49 ஓவர்­களில் அனைத்து விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 170 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்­டது. இதில் சிகண்டர் ரசா அதி­க­பட்­ச­மாக 52 ஓட்­டங்­களைப் பெற்றார். 

அதனைத் தொடர்ந்து பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய பங்­க­ளாதேஷ் அணி 28.3 ஓவர்­களில் 2 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 171 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது. 

இதில் ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ரான தமீம் இக்பால் இறு­தி­வரை ஆட்­ட­மி­ழக்­காது களத்தில் நின்று 84 ஓட்­டங்­களைப் பெற்றார்.

இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை – சிம்பாப்வே அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.