கொலம்பியாவின் தலைநகர் போகோடாவில் பாலமொன்று உடைந்து வீழ்ந்ததில் கட்டுமானத் தொழிலாளர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய உட்கட்டமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இடிபாடுகளில் சுமார் 11 பேர் சிக்கி காணாமல் போயுள்ள நிலையில், மீட்புப் பணி தொடர்கின்றது.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமெனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்தப் பாலத்தில் வடிகாலமைப்புப் பணி நேற்று  இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே திடீரெனப் பாலம் உடைந்து வீழ்ந்துள்ளது.

446 மீற்றர் நீளமான இந்தப் பாலம் கடந்த மார்ச் மாதம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.