இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் அதிரடி துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்காக சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டே அவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.