சார்க் வலு ஒழுங்குறுத்துநர்களின் இரண்டாவது கூட்டம் நேற்றுக்காலை கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமானது.

சார்க்  வலு ஒழுங்குறுத்துநர்களின் இரண்டாவது கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் செயலாளரான  எம். ஐ. எம். ரஃபீக் இதன் போது விசேட உரை நிகழ்த்தினார்.

இக் கூட்டத்தில் நேபாளம், இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மாலைதீவுகள், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த சார்க் வலு ஒழுங்குறுத்துநர்களின் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்  தம்மித்த குமார சிங்க மற்றும் பணிப்பாளரான  அலி ஹைடர் அல்டாஃப்  ஆகியோரும் இதில் பங்குபற்றியிருந்தனர்.

இதன் போது உரையாற்றிய தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம். ஐ. எம். ரஃபீக்,தென்னாசிய நாடுகளிடையேயான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

சார்க் வலு ஒழுங்குறுத்துநர்களின் முதலாவது கூட்டம் பங்களாதேஷில் உள்ள டாக்காவில் நடைபெற்றது.