2018 ஆம் ஆண்டில் இலங்­கையின் பொரு­ளா­தாரம் 5 சத­வீ­தத்தால் வேக­ம­டையும் எனவும் தெற்­கா­சி­யாவில் இவ்­வ­ரு­டத்தில் 6.9 சத­வீத பொரு­ளா­தார வளர்ச்­சியை எதிர்­பார்க்க முடியும் எனவும் உலக வங்கி எதிர்வு கூறி­யுள்­ளது.

மேலும் தெற்­கா­சி­யாவில் நுகர்வு சக்தி வலு­ வா­ன­தாக இருப்­ப­துடன் ஏற்­று­மதி துறை மேம்­பட்டு முத­லீ­டுகள் சிறப்­பா­ன­தாக இருக்கும் என சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அதேபோல்  2018 -- 2019 ஆம் நிதி­யாண்டில் இந்­தியா 7.3 சத­வீத பொரு­ளா­தார வளர்ச்­சியை அடையும் எனவும் 2019 - 2020  ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் அது 7.5 சத­வீ­த­மாக இருக்கும் எனவும் சுட்­டிக்காட்­டப்­பட்­டுள்­ளது.அத்­துடன் தனியார்துறை பொருட்கள் மற்றும் சேவை வரிக்கு இசை­வாக்­க­ம­டைந்து தனியார் துறையின் முத­லீடு அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்­தியா தவிர்ந்த பிராந்­தி­யத்தில் 2018 ஆம் ஆண்டு 5.8 சத­வீத வளர்ச்­சியும் 2019 ஆம் ஆண்டில் 5.9 சத­வீத வளர்ச்­சியும் அடையும்.

அத்­துடன் பாகிஸ்தான் 2018 - 2019 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் 5.8 சத­வீத வளர்ச்சி­யையும் பங்­க­ளாதேஷ் 6.7 சத­வீத வளர்ச்­சி­யையும் பெறும் எனவும் 2018 ஆம் ஆண்டில் வலு­வான தனியார் முத­லீடு மற்றும் நுகர்வு விருத்­தியின் அடிப்­ப­டையில் 5%வேகத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.