ஜனாதிபதியின் சவால்.!

Published By: Robert

16 Jan, 2018 | 09:47 AM
image

புதிய கட்­சியை உரு­வாக்கி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை வீழ்த்­து­வ­தாக கூறும்  தலைவ­ருக்கும் அவ­ரது கூட்­ட­ணிக்கும்  முது­கெ­லும்பு இருக்­கு­மாயின் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் இருந்து நீங்கி தனித்து பய­ணத்தை ஆரம்­பித்துக் காட்­டு­மாறு கூறு­கின்றேன்.  எனது கட்­சியின் கொள்­கை­யினை வைத்­து­கொண்டு செயற்­பட வேண்டாம்  என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

இப்­போ­தைய ஊழல் வாதி­க­ளுக்கும், முன்­னைய ஊழல் வாதி­க­ளுக்கும் சட்­டத்தின் மூலம் உய­ரிய தண்­ட­னை­யினை பெற்­றுக்­கொ­டுப்பேன் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தேர்தல் பிரச்­சார நகர்­வுகள் நாடு பூரா­கவும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் அத்­த­ன­கல பகு­தியில் நேற்று முன்­தினம் நடந்த மக்கள் கூட்­டத்தில் அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

 அவர் மேலும்  அங்கு உரை­யாற்­று­கையில் 

கள்­ளர்கள், ஊழல் வாதிகள் நிறைந்த  அர­சியல் சூழ­லி­லேயே நாம் எனது பய­ணத்தை முன்­னெ­டுத்து செல்­ல­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இதில் இந்த நாட்டை தூய்­மை­யாக முன்­னெ­டுத்து செல்லும் எனது பய­ணத்தில் எந்த கட்­சி­யாக இருந்­தாலும் சரி அல்­லது எந்தப் பத­வி­யி­ன­ராக இருந்­தாலும் சரி ஊழல் செய்­ப­வர்­க­ளையும்,  முன்னர் செய்­த­வர்­க­ளையும்  பாகு­பாடு இன்றி தண்­டித்து நீதியை நிலை­நாட்­டுவேன். 

குற்­ற­வா­ளி­க­ளுக்­கான உய­ரிய தண்­ட­னை­யினை பெற்­றுக்­கொ­டுக்க சட்­டத்தின் மூலம் என்னால் செய்ய முடிந்த அனைத்­தையும் நான் செய்வேன். நான் பத­வியை வைத்­து­கொண்டு விளை­யாட ஆட்­சிக்கு வர­வில்லை. நான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்த காலத்தில் இருந்து சிகெரட் நிறு­வ­னங்­களை பகைத்­துக்­கொண்­டுள்ளேன். சில மருத்­துவ நிறு­வ­னங்­களை பகைத்­துக்­கொண்­டுள்ளேன். அவை  அனைத்தும் எமது நாட்­டுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்­பதை நான் நன்­றாக உணர்­கின்றேன்.  

இப்­போது மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்­திலும் பல அழுத்­தங்கள் உள்­ளன. எனினும் நான் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவை நிய­மித்து உண்­மை­களை கண்­ட­றிந்து அதற்­கான  நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் செயற்­பா­டு­களை செய்து வரு­கின்றேன் . நான் ஆணைக்­குழு அமைத்தும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தது   பொழு­து­போக்­குக்­காக    விளை­யாட அல்ல. மக்­களின் வேதனை என்­ன­வென்­பதை   என்னால் உணர முடி­கின்­றது. அதற்­கான நியாயம் என் மூல­மாக கிடைக்கும். அந்த வாக்­கு­று­தியை நான் மக்­க­ளுக்கு கொடுக்­கின்றேன். 

இன்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை பிள­வு­ப­டுத்தி அதன் மூல­மாக எம்மை வீழ்த்த சிலர் முயற்­சித்து வரு­கின்­றனர். இவர்கள் மீண்டும் எமது கொள்­கை­யினை அழிக்கும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எமது பாரம்­ப­ரிய உணர்­வு­களை அழிக்கும் நட­வ­டிக்­கை­களை இவர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். ஆகவே இவர்­களின் கட்சி உறுப்­பு­ரி­மை­யினை நீக்கும் செயற்­பா­டு­களை இவர்­களே முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இவர்கள் ஊடக சந்­திப்­பு­களில் தான் புதிய கட்­சியை உரு­வாக்­க­வில்லை என கூறிக்­கொண்டு  மக்­க­ளிடம் புதிய கட்­சிக்கு வாக்­க­ளிக்க கூறு­கின்­றனர். 

இவர்­க­ளுக்கு முது­கெ­லும்பு இருக்­கு­மென்றால் , மேடையில் வீரர்கள் போல கதைப்­பது உண்­மை­யெனின் அதன் தலைவர் உள்­ளிட்ட அனை­வரும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியை விட்டு வெளி­யேறி தனிக் கட்­சி­யினை உரு­வாக்கிக் காட்ட வேண்டும். நாம் தான் இந்த புதிய  கட்­சியின் உறுப்­பி­னர்கள் என்­பதை  வெளிப்­ப­டுத்திக் காட்­ட­வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறி வெற்றிபெற்றுக் காட்டுங்கள். கட்சியின் கொள்கையும் வேண்டும், கட்சியின் பலகையும் வேண்டும், அடையாளம் வேண்டும் ஆனால் தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக செயற்படப்போவதில்லை எனவும் கூறுகின்றனர். இவர்களின் செயற்பாடுகள் வெட்கப்பட வேண்டியவையாகும்   எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08