இந்­தி­யா­வா­னது இலங்கை மக்­களின்  எதிர்­காலம் அபி­வி­ருத்தி மற்றும்  சமா­தானம்  என்­ப­ன­வற்றின்   சிறந்த உண்­மை­யான  பங்­கா­ளி­யாக   தொடர்ந்து செயற்­படும். இலங்­கையில் மேற்­கொள்­ளப்­படும் உதவி திட்­டங்­களில் செல்­வாக்கு செலுத்தும் அணு­கு­முறை எம்­மிடம்கிடை­யாது. 

செல்­வாக்கு செலுத்தும் அணு­கு­முறை எம்­மிடம் கிடை­யாது. மாறாக மக்­களின் விருப்­பத்­துக்கு அமை­வா­கவே எமது உத­விகள் மற்றும் கட­னு­த­விகள் அமையும் என்று இலங்­கைக்கு விஜயம்  மேற்­கொண்­டுள்ள  இந்­தி­யாவின்   சட்டம்  நீதி­த்­துறை  தகவல் தொழில்­நுட்பம் மற்றும்  இலத்­தி­ர­னியல்  துறை அமைச்சர்  ரவி சங்கர் பிரசாத்  தெரி­வித்தார். 

இந்­தி­யாவின் டிஜிட்டல் இந்­தியா  வேலைத்­திட்­டத்தில் இலங்­கைக்கு முழு­மை­யான உத­வியை வழங்­கு­வ­தற்கு  இந்­தியா தயா­ராக இருக்­கின்­றது  என்றும்   இந்­திய மத்­திய அமைச்சர்  ரவி சங்கர் பிரசாத் சுட்­டிக்­காட்­டினார்.  

கொழும்பில் அமைந்­துள்ள சர்­வ­தேச கற்­கை­க­ளுக்­கான லக் ஷ்மன் கதிர்­காமர்  நிலை ­யத்தில் நேற்­றைய தினம் மறைந்த  முன்னாள்  வெ ளிவி­வ­கார அமைச்சர்  லக் ஷ்மன் கதிர்­காமர்   நினைவு பேருரை  நிகழ்த்­து­கை­யி­லேயே   இந்­திய  மத்­திய அமைச்சர்  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன்  வெளிவி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன இலங்­கைக்­கான இந்­திய தூதுவர்  தரன்ஜித் சந்து   மற்றும்  இரா­ஜ­தந்­தி­ரிகள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­டனர்.    

இந்­தி­யாவின் சட்டம்  நீதி­த்­துறை  தகவல் தொழில்­நுட்பம் மற்றும்  இலத்­தி­ர­னியல்  துறை அமைச்சர்  ரவி சங்கர் பிரசாத்  இந்த நிகழ்வில்  மேலும் உரை­யாற்­று­கையில் 

இலங்­கையின் மறைந்த முன்னாள்   வெளி­வி­வ­கார அமைச்சர்    லக் ஷ்மன் கதிர்­காமர்   சிறந்த  இரா­ஜ­தந்­தி­ரி­யாக இருந்­த­துடன்  இந்­தி­யாவின்  சிறந்த  நண்­ப­ரா­கவும் திகழ்ந்தார்.   இலங்கை மற்றும் இந்­தி­யா­வுக்கு  இடை­யி­லான உறவின் விழு­மி­யங்­களை  உணர்ந்­த­வ­ராக லக் ஷ்மன் கதிர்­காமர்   செயற்­பட்டார். 

இலங்­கையும் இந்­தி­யாவும் வர­லாறு    கலா­சாரம்  உள்­ளிட்ட விட­யங்­களில் ஆழ­மான    மற்றும் பல­மான  உறவை  கொண்­டுள்­ளன. இந்­தி­யாவின்  சுதந்­திர  போராட்ட வீரர்கள் இலங்­கையின் சுதந்­திர  போராட்ட வீரர்­க­ளுடன் தொடர்­பு­களை கொண்­டி­ருந்­தனர். உலகில் இரண்டு நாடு­க­ளுக்கு  இடை­யி­லான  நெருக்­க­மான  உற­வுக்கு   சிறந்த மாதி­ரி­யாக இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும்  இடை­யி­லான உறவு காணப்­ப­டு­கி­றது. 

அண்­மையில்  இலங்கை பிர­தமர் இந்­தி­யா­வு­க்கு விஜயம்   செய்­தி­ருந்தார். இதன்­போது    இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான  இரு­த­ரப்பு உறவு மற்றும் அபி­வி­ருத்தி கூட்­டு­றவு  குறித்து விரி­வாக  கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.   இந்­நி­லையில் இங்கு  முக்­கிய விடயம் ஒன்றை குறிப்­பி­டு­கின்றேன். 

அதா­வது  இந்­தி­யா­வா­னது இலங்கை மக்­களின்  எதிர்­காலம் அபி­வி­ருத்தி மற்றும்  சமா­தானம் என்­ப­ன­வற்றில் சிறந்த உண்­மை­யான  பங்­கா­ளி­யாக தொடர்ந்து செயற்­படும். இலங்­கையில்  மேற்­கொள்­ளப்­படும்  உதவி திட்­டங்­களில் செல்­வாக்கு செலுத்தும் அணு­கு­முறை எம்­மிடம் கிடை­யாது. மாறாக மக்­களின் விருப்­பத்­துக்கு அமை­வா­கவே எமது உத­விகள் மற்றும் கட­னு­த­விகள் அமை                யும்.  

கடந்த 70 வரு­டங்­களில் இந்­தியா  பாரிய ஜன­நா­யக பய­ணத்தை  மேற்­கொண்­டுள்­ளது. இந்­தி­யா­வா­னது மக்­களின் உரி­மையை பலப்­ப­டுத்தி அவர்­களை வலு­வூட்டும்   செயற்­பாட்டில் ஈடு­பட்­டுள்­ளது.    மக்­களின்  சுதந்­தி­ரமே   இந்­தி­யாவின் மிகப்­பெ­ரிய பல­மாகும். வன்­மு­றையை  நம்பி  இந்­தியா   செயற்­ப­ட­வில்லை. வன்­மு­றை­களை  பயன்­ப­டுத்தும் சக்­திகள் தோல்­வியை   தழு­வு­கின்­றன.  

இந்­தி­யாவின் அர­சி­ய­ல­மைப்பு இன்று  உலகளவில் பேசப்­படும் அர­சி­ய­ல­மைப்­பாக உள்­ளது. பல்­வேறு உலக நாடுகள்   பெண்­க­ளுக்­கான  வாக்­க­ளிப்பு உரி­மையை  வழங்­கு­வது குறித்து ஆரா­யும்­போது இந்­தியா  பெண்­க­ளுக்­கான வாக்­க­ளிப்பு உரி­மையை வழங்­கி­யது. 

1965 ஆம்   இலங்கை உலகின் முத­லா­வது  பெண் பிர­த­மரை   உரு­வாக்­கி­யது.  அடுத்­த­வ­ருடம்  1966 ஆம் ஆண்டு இந்­தி­யாவும் பெண் பிர­த­மரை  உரு­வாக்­கி­யது.  

தற்­போது   பிர­தமர்   நரேந்­திர மோடி தலை­மையில் இந்­தியா  அனைத்து துறை­க­ளிலும் முன்­னேறிச் செல்­கின்­றது. எனினும் சில சவால்கள் எமக்கு உள்­ளன. குறிப்­பாக  வறுமை குறித்த  சவாலை   வெற்­றி­கொள்ள   செயற்­பட்­டு­வ­ரு­கின்றோம்.  

தற்­போது இந்­தியா  டிஜிட்டல் இந்தியா வேலைத்­திட்­டத்தை பர­வ­லாக முன்­னெ­டு த்து வரு­கின்­றது. குறிப்­பாக தகவல் தொழில் நுட்ப துறையில் உலகில் முன்னணியில் இருக்கவேண்டும் என்று இந்தியா விரும் புகின்றது. டிஜிட்டல் தகவல் தொழில் நுட் பம்  மக்களை  பலப்படுத்துகின்றது.  

இலங்கையின் பல்கலைக்கழகங்களுடனும்     எமது டிஜிட்டல் இந்தியா  வேலைத்திட் டத்தில்  இணைந்து பணியாற்ற முன்வந் துள்ளோம். அதாவது இந்தியாவின் டிஜிட் டல் இந்தியா  வேலைத்திட்டத்தில் இலங் கைக்கு முழுமையான உதவியை வழங்கு வதற்கு  இந்தியா தயாராக இருக்கின்றது   என்றார்.